×

காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்!!

காஞ்சிபுரம்:ஏழாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தேசிய கைத்தறி தினம் கடந்த 7ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல், இத்துறை இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் காணொலி மூலம் காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையம், சத்தீஸ்கர் ராய்கரில் நெசவாளர்கள் சேவை மைய கட்டிடம் மற்றும் மெய்நிகர் கண்காட்சி, கேரளா, அசாம் மற்றும் ஸ்ரீநகரில் கைவினை கிராமங்கள் போன்றவற்றை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கைத்தறி துறை உற்பத்தியை தற்போதைய அளவான ரூ,60,000 கோடியிலிருந்து ரூ.1,25,000 கோடிக்கு மேல் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என்றும், கைத்தறி பொருட்கள் ஏற்றுமதி தற்போதைய அளவான ரூ. 2,500 கோடியிலிருந்து, அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.10,000 கோடியாக அதிகரிக்கப்படவுள்ளன என்றும் தெரிவித்தார்.
சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டில், நாம் அனைவரும் இந்திய கைத்தறி தயாரிப்புகளை வாங்கி, எனது கைத்தறி, எனதுபெருமை (#MyHandloomMyPride)   என்ற ஹேஸ்டாக்குடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்ளும்படி பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார் . நெசவாளர்களையும், கைத்தறி துறையையும் வளர்க்க, மக்கள் குறைந்தது ஒரு கைத்தறி  தயாரிப்பையாவது வாங்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.



Tags : Central Textiles Minister ,Poush Goel ,Design Resource Centre ,Ganzipura , பியூஷ் கோயல்
× RELATED நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள்...